தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு சமீபத்தில் நடந்த நிலையில், அந்த நிகழ்விலிருந்து எடுக்கப்பட்ட காணொளி ஒன்று எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் மாநாட்டுத் திடலின் சுவர்களை ஏறித் தாண்டி, அவசரம் அவசரமாக வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்தத் திடீர் வெளியேற்றக் காட்சி சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாகப் பரவியது. இளைஞர்கள் பலர் இவ்வாறு வெளியேறியதற்குக் காரணம், அவர்களுக்கு நிகழ்ச்சியின் மீதும் அதன் பேச்சுகள் மீதும் ஆர்வம் இல்லாமல் போனதுதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.