முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அரசின் இந்த அதிரடி முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் மற்றும் அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்குச் செவிசாய்த்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசின் இந்த ஜனநாயகப் பண்பு மிகவும் பாராட்டுக்குரியது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற ஆரோக்கியமான அணுகுமுறை வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
