சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா திருவனந்தபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, தமிழக அரசியல் மற்றும் கேரளா அரசியல் குறித்து கலகலப்பாகப் பேசினார். “சமீபத்தில் தமிழ்நாட்டில் நிறைய பேர் முதலமைச்சர் ஆக முயற்சி செய்தார்கள், ஆனால் எங்களுக்கு இப்போது ஒரு நல்ல முதலமைச்சர் (விஜய்) கிடைத்துவிட்டார். அதுபோலவே சீக்கிரம் உங்களுக்கும் ஒரு நல்ல முதலமைச்சர் கிடைக்கட்டும்” என்று அவர் பேசியது அரங்கத்தையே அதிரவைத்தது.
தமிழகத்தில் நடந்துள்ள ஆட்சி மாற்றத்தையும், புதிய முதலமைச்சரின் செயல்பாடுகளையும் பாராட்டும் வகையில் ஆர்.ஜே. பாலாஜி பேசிய இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மலையாளக் கலைஞர்கள் மீதான தனது பற்று, நடிகர் இந்திரன்ஸின் அர்ப்பணிப்பு மற்றும் சூர்யா இந்தப் படத்திற்காக எடுத்த முயற்சி எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டாலும், அவர் பேசிய அந்த அரசியல் பஞ்ச் தான் இப்போது டாப் டிரெண்டிங்.
