தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் சௌமியா அன்புமணி, மது ஒழிப்பு குறித்து மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். “ஒரு டாஸ்மாக் மதுக்கடையை அரசு மூடினால், அதற்கு அருகிலேயே சட்டவிரோதமாக நான்கு, ஐந்து சந்து கடைகள் உடனடியாகத் திறக்கப்படுகின்றன. இது மது ஒழிப்பு நடவடிக்கையைப் பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே, இந்த சந்து கடைகளை அரசு கண்டிப்பாகத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.

​சௌமியா அன்புமணி இந்த முக்கியமான புகாரை அவையில் முன்வைத்தபோது, முதலமைச்சர் விஜய் அதனை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், அவர் பேசப்பேச அதன் முக்கியக் குறிப்புகளைத் தனது டைரியில் முதல்வர் விஜய் குறித்துக் கொண்டார். மது ஒழிப்பு தொடர்பான எதிர்க்கட்சி உறுப்பினரின் கோரிக்கையை முதல்வர் உடனுக்குடன் கவனித்து நடவடிக்கை எடுக்கத் தயாராவது போன்ற இந்தத் தருணம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.