கணவன் வேலைக்குச் சென்றால் அவர் பாதுகாப்பாக எப்போது வீடு திரும்புவார் என மனைவிகள் ஆவலுடன் காத்திருப்பது இயல்பு. ஆனால் பணியில் இருந்தபடியே கணவனை காணும் வாய்ப்பு கிடைத்தால் அது மேலும் மகிழ்ச்சியளிக்கும் தருணமாக மாறும். இதற்கு சான்றாக, ஒரு ரயில் ஓட்டுநர் தம்பதியின் அன்பைப் பிரதிபலிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ரயில் என்ஜின் ஓட்டுநராக பணிபுரியும் ஒருவர், தனது வழித்தடத்தில் ரயில் கடந்து செல்லும் போது, வீட்டிற்கு அருகில் வந்ததும் மனைவிக்குத் தெரியப்படுத்தும் வகையில் ஹார்ன் அடித்து சிக்னல் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனை தினமும் எதிர்பார்த்து அவரது மனைவியும் வீட்டில் காத்திருப்பார்.
View this post on Instagram
கணவரின் சிக்னல் கிடைத்தவுடன், அவர் ஜன்னல் வழியாக கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்துகிறார். இந்த அன்புப் பரிமாற்றம் அடிக்கடி நடைபெறும் நிலையில், அதனை அந்த பெண் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கணவன் – மனைவி இடையே உள்ள எளிய, இயல்பான அன்பைக் கண்டு பயணிகளும், இணையவாசிகளும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். “இந்த அன்பு வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்” என பலரும் வாழ்த்துச் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.
