சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. அதில், ஒரு மனைவி தனது கணவருக்கு அவரது கனவு பைக்கை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்துகிறார். அந்த தருணத்தில் கணவனின் முகத்தில் தோன்றிய புன்னகையும், பின்னர் வழிந்த ஆனந்தக் கண்ணீரும் அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியது. கணவன்–மனைவி உறவின் அழகை வெளிப்படுத்தும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோவில், கணவன் தனது மகனுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கும் போது, புதிய பைக் ஓட்டி ஒருவர் அங்கு வருகிறார். முதலில் குழம்பிய கணவர், பின்னர் மனைவியைப் பார்த்ததும் அந்த பைக் தன்னுடையது என்பதை உணர்ந்தார். உடனே மனைவி பைக்கின் சாவியை கையளிக்க, கணவன் கண்ணீருடன் அவளை இறுக்கமாக கட்டிப்பிடிக்கிறார். இந்த உணர்ச்சி பொங்கும் காட்சி தான் வீடியோவின் சிறப்பாக இருந்து, அனைவரின் மனதையும் தொட்டுவிட்டது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @vinayshaarma பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதுவரை 9 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பலரும், “கோடீஸ்வரர்களாலும் கூட இப்படியான அன்பு கிடைக்காது… நடுத்தர குடும்பங்களுக்கே இந்த மகிழ்ச்சி தெரியும்” என கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொருவர், “ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு. அவர்களும் அன்புக்கும் மரியாதைக்கும் தகுதியானவர்கள்” என்று பதிவு செய்துள்ளார். கணவன்–மனைவி பாசத்தை வெளிப்படுத்திய இந்த வீடியோ இணைய உலகையே நெகிழ வைத்துள்ளது.
