
கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இளைஞனின் இந்த செயலுக்கு சிலர் கண்டித்தும் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷின் தாய் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மகன் இதய நோயாளி என்று தெரிந்தும் அவனை மருத்துவர் காலால் எட்டி உதைத்தார்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை விக்னேஷ் தரப்பு வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.