விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லாஸ்லியா. அந்த நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் பேச்சால் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முதலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் உடன் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் விளம்பர படங்களில் நடித்து வந்த லாஸ்லியா சட்டை என உடல் எடை குறைத்து நாளுக்கு நாள் கவர்ச்சி காட்ட தொடங்கினார். இந்நிலையில் லாஸ்லியா கவர்ச்சி ஆடைகளுக்கு பதிலாக சுடிதார் அணிந்து லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் இதனை பார்த்த இணையவாசிகள் இந்த லாஸ்லியாவை தான் எதிர்பார்த்தோம் என கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/Ct4CeaTMymR/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==