சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குடும்பங்களில் ஒன்று ரோபோ சங்கரின் குடும்பம். இவருடைய மகள், மனைவி என அனைவருமே ரீல்ஸ் செய்து வெளியிடுவது வழக்கம். ரோபோ சங்கர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் சமீப காலமாகவே இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்  நடிகர் ரோபோ சங்கர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக அவரது மகள் இந்திரஜா சங்கர் அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார். போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மதுவுக்கு அடிமையாக இருந்ததால் என் தந்தைக்கு அதிக உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து வெளியே வந்து புதிய வாழ்க்கை வாழ்கிறார். வரும்கால தலைமுறையினர் இதுபோன்ற கெட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும்’ என்றார்.