நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜுன். அதன் பின் ‘சொல்லிவிடவா’ படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா சினிமாவில் நடிக்காமலேயே ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில் இவருக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் பெரியவர்கள் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தம்பி ராமையாவின் மகன் உமாபதி ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’, ‘தண்ணி வண்டி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.