டெல்லியில் நடைபெற்ற சர்வதேச AI உச்சி மாநாட்டில், உலகின் முன்னணி AI நிறுவனங்களான OpenAI மற்றும் Anthropic ஆகியவற்றின் சி.இ.ஓ-க்களுக்கு இடையே நிலவும் ‘பனிப்போர்’ வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது, அனைவரும் ஒருவருக்கொருவர் கைகோர்த்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ஆனால், அருகருகே நின்றிருந்த OpenAI சி.இ.ஓ சாம் ஆல்ட்மேனும், Anthropic சி.இ.ஓ டாரியோ அமோடியும் கைகோர்க்கத் தயங்கி, கைகளைக் தூக்கி கொண்டு நின்றது அங்கிருந்தவர்களிடையே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
‼️🇮🇳 CRINGE: Anthropic CEO and Sam Altman refuse to hold hands on stage at the AI Impact Summit with PM Modi pic.twitter.com/1bQo47WojW
— International Cyber Digest (@IntCyberDigest) February 19, 2026
“>
OpenAI நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் வெளியேறி Anthropic-ஐத் தொடங்கிய அமோடிக்கும், ஆல்ட்மேனுக்கும் இடையிலான தொழில்முறைப் பகை, இந்த சர்வதேச மேடையிலும் வெளிப்பட்டது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
