இன்று சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம். இது 1976ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இடது கை பழக்கம் பிறவியிலேயே சிலருக்கு ஏற்படுகிறது. இப்படி இயற்கையாக அமைந்ததை மாற்ற முயற்சிக்க கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, குழந்தைகளுக்கு இடது கை பழக்கம் இருந்தால் பெற்றோர்கள் அடித்து கண்டிக்காமல் அவர்களை அப்படியே விட்டுவிடுவது நல்லது.

உலகில் பல பிரபலங்கள் இடது கை பழக்கம் கொண்டவர்கள். கிரிக்கெட் கடவுள் சச்சின், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரபல தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ். பிரபல திரைப்பட நடிகர்கள் அமிதாப் பச்சன், டாம் குரூஸ், ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். உலகில் 10% பேர் இடது கை பழக்கம் .