பொதுவாகவே பழங்கள் சீசன் வந்து விட்டால் சந்தையில் அதிகம் காணப்படும். சீசனில் அளவுக்கு அதிகமாக பழங்கள் விளையும் நேரத்தில் அதனை பழுக்க வைக்க சில மருந்துகளை தெளிப்பார்கள். இப்படி பயன்படுத்தும் மருந்துகள் மனிதர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இதனை எச்சரிக்கும் வகையில் FSSAI ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது மாம்பழம் சீசன் வந்து விட்டதால் பழங்கள் மஞ்சளாக இருப்பதற்கும் விரைவில் பழமாக மாற்றுவதற்காகவும் கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது.

இதிலிருந்து வெளியாகும் கால்சியம் கார்பைடு அசிட்டிலின் வாயு ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றை சிறிதளவு விட்டு செல்கிறது. இதனால் மனிதர்களுக்கு ஆபத்து, உடல்நிலை கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது மாம்பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்தக் கூடாது, அதற்கு பதிலாக எத்திலின் வாயுவை பயன்படுத்தலாம்.

இதனால் எந்தவிதமான உடல்நிலை கோளாறுகளும் வராது. எச்சரிக்கையை மீறி செயல்படுபவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும் கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுவதால் மனிதர்களுக்கு மயக்கம், தொடர்ச்சியான தாகம், எரிச்சல், விழுங்குவதில் சிக்கல், வாந்தி, தோல் அல்சர் மற்றும் உடல் வலுவிழந்து காணப்படுதல் உள்ளிட்ட நோய்கள் வரலாம்.