மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியபோது அன்னையர் தினத்திற்கான பரிசுகளை மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு நடுவே அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் மோடியும் அவரது மறைந்த தாயார் ஹீரா பென் ஆகியோர் இணைந்து இருக்கும்படியான வரைந்த புகைப்படத்தை கைகளை தூக்கி காண்பித்தபடி நின்றனர்.

அதை கண்ட பிரதமர் மோடி எஸ்பிஜி கமாண்டோக்களிடம் படங்களை வாங்கி வருமாறு கூறியதுடன் இரண்டு இளைஞர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பி படத்திற்கு பின்னால் அவர்களது முகவரியை எழுதுமாறும், அவர் தெரிவித்தார். மேலும் மேற்கில் இந்த அன்னையர் தினத்தை இந்நாளில் மட்டுமே மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் மா துர்கா, மா காளி மற்றும் பாரத மாதாவை ஆண்டுதோறும் 365 நாட்களும் வணங்கி நாம் அன்னையரை கொண்டாடி வருகிறோம் என தெரிவித்தார்.