தமிழ்நாட்டை ஆண்டவர்கள் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்று சில மாதங்களிலேயே கல்வி வளர்ச்சியில் புதிய மைல்கள் படைத்துள்ளார். வடமாநிலங்களில் ஒழுங்கான கல்வி இல்லை, வேலை வாய்ப்பு இல்லை என தமிழகத்திற்கு படையெடுத்து வருபவர்கள் புலம்பும் நிலையில், தமிழ்நாடு கல்வி, வேலை வாய்ப்பு, தனிநபர் வருமானம் என அனைத்திலும் வட மாநிலங்களை காட்டிலும் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றதும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் பசியை போக்கினார். காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு நேரத்தோடு செல்வதோடு மாணவர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. அதன் பிறகு அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் உயர் கல்வியில் சேர வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் படித்து மருத்துவம் படிக்க வரும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மருத்துவ படிப்பில் மட்டுமின்றி பொறியியல், சட்டப்படிப்பு, வேளாண்மை உள்ளிட்ட தொழில் படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். மாணவர்களின் படிப்பு திறன் மட்டும் இன்றி அவர்களின் தனி அடையாளத்தையும் கண்டெடுக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் எதிர்த்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு ஏற்ற மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். தமிழ்நாடு அரசு நிதி பற்றாக்குறையில் இருக்கும் போதும் மேற்கண்ட திட்டங்களில் தொய்வு இல்லாத அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்கிறார். மேலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட பல திட்டங்களின் மூலம் கல்வியிலும் நாட்டிற்கே தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.