முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தான் தன் பதவி ஏற்பு உரையை முதல்வர் ஸ்டாலின் துவங்கினார். கடந்த 2021-ம் வருடம் மே 7-ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு உள்ளார்.
முதல்வராக பதவியேற்றதிலிருந்து இப்போது வரை இடைவிடாமல் அரசு நலத்திட்டம் வழங்கும் விழா, அரசு முறை பயணங்கள், கட்சி பயணங்கள் என 70 வயதை தொட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட பயணங்கள் அசாதராணமானவை என்றே கூறலாம்.
இன்று அவர் தன் 70-வது வயதை அடைந்துள்ளார். 70 வயதிலும் ஓர் இளைஞர் போல் சுறுசுறுப்பாக சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வரும் முதல்வர், தொடர்ந்து பல்லாண்டுகள் இதே போல் இயங்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது.