அமெரிக்காவில் தையல் தொழிலுக்கு இருக்கும் அசுரத்தனமான தேவையும், அங்கு ஒரு தையல்காரர் ஒரு மணி நேரத்திற்குச் சராசரியாக 25 டாலர் (சுமார் ₹2,300) வரை சம்பாதிக்கும் செய்தி சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.

இந்தியப் பெண்ணான கோமல் பாண்டே வெளியிட்டுள்ள இந்த வீடியோ, இந்தியாவில் உள்ள திறமையான தையல் கலைஞர்களுக்கு வெளிநாட்டில் கொட்டிக்கிடக்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.‌

 

 

View this post on Instagram

 

A post shared by Komal Pandey | Indian Blogger in America 🇺🇸 (@komal_pandey_america)

“>

ஆயத்த ஆடைகளை வாங்கும் அமெரிக்கர்கள், அதன் பிட்டிங்கை மாற்றுவதற்காக மட்டுமே ஒரு ஜீன்ஸ் பேண்ட்டுக்கு 40 டாலர் (சுமார் ₹3,500 முதல் ₹4,000 வரை) வரை அள்ளி வீசத் தயாராக இருக்கிறார்கள். ‌

இந்தியாவில் எதிர்பார்த்த வருமானம் இல்லாதவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்றால், சொந்தமாக ஆடையகம் தொடங்கி குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொழில்முனைவோராக விஸ்வரூபம் எடுக்கலாம் என அந்த வீடியோவில் கோமல் பாண்டே பக்காவான ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.