தமிழக முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு மாவட்டம் தோறும் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலகம் அமைக்க தற்போது ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக ஆவின் பாலகம் அமைப்பதற்கு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் கீழ் விருப்பம் உள்ளவர்கள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.இதில் பழங்குடியினர் தனி நபர்களுக்கு 50% அதாவது 3.75 லட்சம் மானியம் வழங்கப்படும் எனவும் பாலகம் அமைப்பதற்கு விருப்பமுள்ளவர்கள் காஞ்சிபுரம் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.