கடலின் ஆழத்தில் வாழும் ஆக்டோபஸ்கள் பொதுவாக அமைதியானவை என்று கருதப்பட்டாலும், சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், கடலுக்கு அடியில் சென்ற அந்த ஒரு நபர் ஆக்டோபஸைப் பிடிக்க முயல்கிறார்.

ஆனால், அந்த ஆக்டோபஸ் எதிர்பாராத விதமாக அவரது கை மற்றும் நீச்சல் உடையில் மிக வலுவாக ஒட்டிக்கொண்டு அவரைத் தாக்குகிறது. அவர் எவ்வளவு முயன்றும் அந்த ஆக்டோபஸ் விடாமல், இறுதியாக அவரது கழுத்தைப் பிடித்து நெரிக்கத் தொடங்குகிறது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு, அவர் எப்படியோ நீரின் மேல்பரப்பிற்கு வந்து அந்த உயிரினத்திடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

இந்த திக் திக் காட்சிகள்  (X) தளத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. “கடல் அழகானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட” என்று இந்த வீடியோவை பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆக்டோபஸ்களை மென்மையான உயிரினங்களாக நினைத்தவர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

“>

 

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிரோடு தப்பினார் என்றும், வன உயிரினங்களை அவற்றின் போக்கிலேயே விடுவதுதான் சிறந்தது என்றும் கூறி வருகின்றனர்.