சமூக வலைதளமான பக்கமான இன்ஸ்டாகிராமில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக ஒரு காணொளி வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் முதலில் “ஆல் அவுட்” என்ற கொசு கொல்லும் பொருளின் வெளிப்புற அட்டை காட்டப்படுகிறது. பின்னர், அதே அட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்களுடன் “ஆல் அவுட் 2026” என்று எழுதப்பட்டுள்ளது.
இதில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் ஒரு ஓரத்தில் விஜய் அவர்களின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ அட்டகாசமாக எடிட் செய்யப்பட்டு, பார்க்கும் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
