தமிழக கட்சி கழக தலைவர் விஜய் மதுரையில் கடந்த 21-ஆம் தேதி இரண்டாவது மாநாட்டை நடத்தி முடித்தார். அவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அங்கிள் என குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அணில் ஏன் அங்கிள் அங்கிள் என்று கத்துகிறது. அது ஜங்கிள் ஜங்கிள் என்று தான் கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் சிஎம் சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் அங்கிள் எப்படி ஆனார்? நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலும் லஞ்சமும் ஒரு நிமிடத்தில் ஒழியும்.

கோடி கோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தபோது அதிமுக யாரிடம் இருந்தது என விஜய் ஏன் கேட்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.