ஆளுநர் மாளிகையே அடைக்கிடுவாயே என்ற தலைப்பில் திமுகவினுடைய பொருளாளர் டி.ஆர் பாலு கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். அதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமானப்படுத்தக்கூடிய வகையிலே பல்வேறு தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழக அரசு சட்டமன்றத்திலே நிறைவேற்றிய நீட்டு விலக்கு உள்ளிட்ட பல மசோதாக்கள்  ஆளுநர் மாளிகையில் ராஜ் பவனிலே குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சட்டம் முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ரவி,  தன் பொறுப்பை நிறைவேற்றாமல் மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராக சுற்றி நிகழ்ச்சிகளை நடத்தி..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றார்என டி.ஆர் பாலு தன்னுடைய அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கின்றார். அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள்,  தமிழகம் என்று சொல்லுங்கள் என்றெல்லாம் தொடர்ந்து பேசி வருகின்றார்.

சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழை பின் தள்ளக்கூடிய வேலைகளை தமிழக ஆளுநர் ரவி ஈடுபட்டு வருவதாக டி.ஆர் பாலு அவர்கள் தன்னுடைய அறிக்கையிலே குறிப்பிட்டு இருக்கிறார்.  அது மட்டும் இல்லாமல் வெள்ளையனை எதிர்த்து வீர போர் புரிந்து மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களுடைய தியாகத்தை தமிழ்நாடு அரசு போற்றி வரக்கூடிய நிலையில் ஆளுநர் ரவி அவர்கள் தமிழக அரசின் மீது ஒரு தவறான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை தேடிப் பார்த்தாலும் அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்று ஆளுநர் சொல்லி உள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன்,  மருது சகோதரர்கள், வேலு நாச்சியார்   இவர்களுடைய பிறந்தநாள் உள்ளிட்ட பல விஷயங்களை  அரசு  கொண்டாடி வருகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் படங்களை குடியரசு தின விழாவில் அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்தது மத்திய பாஜக அரசு என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கின்றார். இப்படி தமிழக அரசு எந்த இடத்திலும் சுதந்திரத்திற்காக போராடிய தமிழர்களை அவர்களுடைய வீரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க கூடிய விஷயத்திலும் எங்குமே சுணக்கமாக இல்லை….  தொடர்ந்து அவர்களுக்கான உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இவற்றையெல்லாம் பார்க்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிராகவும்,  தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரக்கூடிய இந்த போக்கை கடுமையாக கண்டிப்பதாக டி. ஆர் பாலு தன்னுடைய அறிக்கையை குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே ஆளுநர் மாளிகையை தன்னுடைய வாயை அடக்க வேண்டும் எனவும்,  பிரிட்டிஷ் ஆட்சியர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமன பதவியில் உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து பொய்களை பேசுகிறார் ஆளுநர் என  மிக கடுமையாக சாடிஇருக்கின்றார். அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டினுடைய வரலாற்றை முழுமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும் எனவும், அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு இப்படி பொய் பேசுவது சரியானது அல்ல என்றும் டி.ஆர் பாலு அவர்கள் தன்னுடைய கடுமையான குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.