தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் கட்சிகள் அதற்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் பிற கட்சிகள் இருப்பவர்களை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் திமுக, அதிமுக மற்றும் தவாக கட்சிகளை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் மற்றும் காமராஜரின் வாரிசு மயூரி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இணைந்தனர்.

இந்த நிலையில் தற்போது மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அதாவது திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதை அரசு தடுத்ததால் தான் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி விஜய் கட்சியில் இணைந்தது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.