சமூக வலைதளங்களில் தற்போது பரவும் ஒரு வீடியோ பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தெருவில், ஒரு நடுத்தர வயதுடைய ஆண், சிறுமியுடன் நெருக்கமாக நடந்து கொள்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அருகில் உள்ள ஒரு குடியிருப்பின் மாடியில் இருந்தவர் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளார்.

ஸ்கூட்டரின் அருகே காத்திருந்த சிறுமியின் அருகில் வந்த அந்த ஆண், முதலில் அவளை கட்டி அணைத்ததும், பின்னர் அவளை தூக்கி ஸ்கூட்டரில் அமர்த்தியும், தரையில் உட்கார்ந்து கொண்டு  பேசி கொஞ்சுவது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த சிறுமி அவரின் கை பிடித்து எழுந்து நிற்கச் சொல்வதும், பின்னர் மீண்டும் கட்டிப்பிடிப்பதும்  வீடியோவில் தெரிகிறது.

அவர்கள் அங்கு நெருக்கமாக பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பகுதியில் இருந்தவர்கள் தண்ணீரை அவர்கள் மீது ஊற்றினர். இதனால் அங்கிருந்து அவர்கள் ஓடிவிட்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் இது தவறான செயல் என்று கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி, பலரின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, சமூகத்தில் சிறுவர்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதிகாரிகள் இதை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.