
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகிறது. அதில் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாக இருக்கும். அதுவும் எதார்த்தமாக நடக்கும் சில சம்பவங்களை சொல்லவே வேண்டாம். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகிறது. அதாவது அந்த வீடியோவில் ஒருவர் ஆற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் ஜாலியாக குளிக்கும் நிலையில் திடீரென காலை ஏதோ கடிப்பது போன்ற இருந்தது. உடனே கீழே குனிந்து அவர் அதனை பிடித்தார். அப்போது தான் அது முதலை என்று தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அதனை தூக்கி வீசிவிட்டு பதறி அடித்துக் கொண்டு தண்ணீரை விட்டு ஓடி படகில் சென்று ஏறிக்கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
View this post on Instagram