சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ப்ளிங்கிட் டெலிவரி ஊழியரின் 5 வினாடி வீடியோ, பார்ப்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வீட்டிற்கு டெலிவரி கொடுத்துவிட்டுத் திரும்பும் அந்த வாலிபர், அங்கு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் கிரிக்கெட் பேட்டைப் பார்க்கிறார்.
மேலும் ஆசையோடு அந்த பேட்டை கையில் எடுத்து சில நொடிகள் கிரிக்கெட் ஷாட்களைப் பயிற்சி செய்து பார்க்கும் அவர், கிளம்பும் முன் மிகுந்த மரியாதையுடனும் அன்படனும் அந்த பேட்டிற்கு முத்தமிட்டு, மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டுச் செல்கிறார்.
View this post on Instagram
“>
இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையவாசிகளின் இதயங்களைத் தொட்டுள்ளதுடன், பலரையும் அழவைத்துள்ளது. சூழ்நிலை மற்றும் குடும்பப் பொறுப்புகள் காரணமாகத் தங்களின் கனவுகளையும் திறமைகளையும் தியாகம் செய்துவிட்டு, ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கும் கோடிக்கணக்கான சாமானியர்களின் நிதர்சனமான வாழ்க்கையை இந்த 5 வினாடி வீடியோ பிரதிபலிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் “வயிற்றுப் பிழைப்புக்காக கைகளில் டெலிவரி பையை ஏந்தியிருந்தாலும், அவனது இதயம் இன்னும் கிரிக்கெட் மைதானத்திலேயே துடிக்கிறது” என்றும், “கனவுகள் ஒருபோதும் இறப்பதில்லை” என்றும் பதிவிட்டு இந்த வாலிபரின் தூய்மையான அன்பையும் ஆர்வத்தையும் சமூக வலைத்தளங்களில் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
