அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, அதிமுகவை ஒரு ‘தாய் வீடாக’ வர்ணித்து உருக்கமாகப் பேசியுள்ளார். “ஒரு குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அதை வீட்டின் உள்ளேயே இருந்து தீர்க்க முயல்பவனே உண்மையான வாரிசு. வெளியிலிருந்து தாக்குதல்கள் வந்தாலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தாயாக நினைக்கும் கட்சியை விட்டுப் போகாமல் அங்கேயே இருந்து போராடுபவர்தான் உண்மையான விசுவாசி. அப்படிப்பட்ட ஒரு தலைவர்தான் அண்ணன் எடப்பாடியார்” என்று அவர் புகழ்ந்து தள்ளினார்.

​அதே சமயம், ஓ.பன்னீர்செல்வம் வீட்டை விட்டு வெளியேறி எதிரிகளுடன் கைகோர்த்தது, அவர் கட்சியைத் தாயாக நினைக்கவில்லை என்பதையே காட்டுகிறது என்றும், அவர் ஒருபோதும் அதிமுகவின் உண்மையான பிள்ளையாக இருக்க முடியாது என்றும் கௌதமி ஆவேசமாகத் தெரிவித்தார்.