மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் உத்தரவின்படியும், கட்சியின் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெரூர் ராஜா வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்க்கால் மூலம் தண்ணீர் எந்தவிதத் தடையுமின்றி கடைமடை வரை சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக இந்தத் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று முழுமையாகப் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. மதிவாணன் அவர்களுடன் இணைந்து இந்தப் பணிகளை நாங்கள் கூட்டாகத் தொடங்கி வைத்தோம்.

“>

 

விவசாயிகளின் நீண்ட நாள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தூர்வாரும் பணியால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.