மத்திய அரசு, ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் (MGNREGA) பெயரை VBGRAMG என மாற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி முடிவிற்குத் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

இதனை விமர்சிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். “ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த VBGRAMG திட்டம் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன? வழக்கம்போல் அமித்ஷாவுக்கு ஈபிஎஸ் ஆமாம் சாமி போடப்போகிறாரா?” என நேரடியாகக் கேள்வி எழுப்பிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.