ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 உயர்ந்து 51,640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 81.60 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 600 ரூபாய் உயர்ந்து 81 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை 2160 ரூபாய் அதிகரித்துள்ளது.