செப்டம்பர் மாதம் மிக முக்கியமான மாதத்தில் ஒன்று. ஏனெனில் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது முதல் முக்கியமான நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்பதினால் இது குறித்து பல முக்கிய அப்டேட்களை பார்க்கலாம். பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த இறுதி நாட்களுக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளுங்கள்.

சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ள சந்தாதாரர்களுக்கு கேஒய்சி அப்டேட் செய்ய ஆதாரை இணைக்காதிருப்பவர்கள் இணைக்க வேண்டும். செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இணைக்க தவறினால் அக்டோபர் 1 முதல் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும். பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் நபராக இருந்தால் தான் ஆதார் எண்ணை செப்டம்பர்க்குள் இணைக்க வேண்டும். இல்லையென்றால் டிரேடிங் செயல்களில் ஈடுபட முடியாது. இலவசமான ஆதாரை அப்டேட் செய்ய  காலக்கடுவை செப்டம்பர் 14 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது. எனவே இலவசமாக ஆன்லைன் மூலம் அவரை அப்டேட் செய்ய இன்னும் ஒரு மாத காலம் தான் உள்ளதால் விரைந்து முடிக்க வேண்டும்.