வானத்தில் சில நேரங்களில் அதிசயமான சம்பவங்கள் அவ்வப்போது நிகழும். அந்த வகையில் கிரகணங்கள் ஒரு அரிதான வானில் நிகழ்வு தான். ரெட் மூன், புளூ மூன் பொன்ராறித்தன நிகழ்வுகள்  வருடத்திற்கு ஒரு முறை நிகழ்கிறது. இந்த நிலையில் மிகவும் அரிதாக நடைபெறக்கூடிய நிகழ்வு ஒன்று இன்று வானத்தில் நிகழப் போகிறது.

அதாவது ப்ளூ மூன் என்று சொல்லப்படும் அரிய நிகழ்வு  நடைபெற இருக்கிறது. நிலவு பூமிக்கு அருகில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் பௌர்ணமி சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. அதே சூப்பர் மூன் மாதத்தில் இரண்டாவது முறை வந்தால் அது ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, இரண்டாவது முழுநிலவு ‘ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

இதனை நாம் சாதாரண கண்களால் பார்க்கலாம். தொலை நோக்கி எதுவும் தேவையில்லை. வழக்கமாக பெளர்ணமி நிலவை விட இந்த ப்ளூ மூன் 14 வழுக்காடு பெரிதாகவும் அதிக வெளிச்சத்துடனும் காண்ப்படும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த ப்ளூ மூன் இன்று (ஆகஸ்ட் 30) வானில் நிகழ்கிறது.