இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை பயன்படுத்துவதை இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் பிப்ரவரி 1 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பிறகு மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதியாக ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதாருடன் தொழிலாளர்களின் கணக்குகள் இணைக்கப்பட வேண்டும் எனவும் இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.