திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரைக் காண முண்டியடித்த கூட்ட நெரிசலில் சிக்கி, ஸ்கூட்டியில் வந்த தம்பதி ஒருவர் அவர் கண்முன்னே நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இந்தச் சிறு விபத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், பிரச்சாரத்தில் பங்கேற்ற தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த காவலர் ஒருவரின் காலில் மோதியது. இதில் அந்தப் போலீஸ்காரரின் கால் எலும்பு முறிந்து அவர் கடும் வலியால் துடித்தார். ​விபத்து நடந்தவுடன் அங்கிருந்த சக காவலர்கள் உடனடியாகப் படுகாயமடைந்த காவலரைத் தூக்கிச் சென்று, தவெக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஜய்யின் வருகையையொட்டி திருச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்த நிலையில், இத்தகைய விபத்துக்கள் நிகழ்ந்தது பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் விஜய் கண்முன்னே தம்பதி விழுந்ததும், காவலர் ஒருவர் படுகாயமடைந்ததும் திருச்சி தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.