
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்து அதற்கு 153 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். அமெரிக்கா இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் இஸ்ரேலுக்கு போர் நிறுத்தம் தேவை என்று அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோஹன் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போர் தொடரும் என்று கூறியதோடு போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் அமைப்புக்கு பரிசாக அமைந்து விடும். மீண்டும் இஸ்ரேல் மக்களுக்கு அவர்கள் மிரட்டல் கொடுக்க அனுமதிக்கும்படி ஆகிவிடும் எனக் கூறியுள்ளார்.