அட்லெட்டிகோ மேட்ரிட் மற்றும் ஆர்சனல் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போது, மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் செய்த வினோதமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. மைதானத்தில் ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பில் இருந்தபோது, அங்கிருந்த ஒரு ரசிகர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது இருக்கையிலேயே அமர்ந்து மிகவும் நிதானமாக சாண்ட்விச் செய்து கொண்டிருந்தார்.
மேலும் கால்பந்து ரசிகர்கள் பொதுவாகப் போட்டியின் ஒவ்வொரு நொடியையும் பதற்றத்துடன் கவனிப்பார்கள், ஆனால் இவர் தனது பசியைத் தீர்ப்பதில் காட்டிய ஆர்வம் அங்கிருந்தவர்களையும், இணையவாசிகளையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
“>
இது குறித்த வீடியோவில், அந்த ரசிகர் ரொட்டித் துண்டுகளை அடுக்கி, அதன் மேல் காய்கறிகள் மற்றும் சாஸ்களைத் தடவி மிக நேர்த்தியாக சாண்ட்விச் தயாரிப்பதைக் காணலாம். “கால்பந்து முக்கியம்தான், ஆனால் பசி அதைவிட முக்கியம்” என்பது போல அவர் செய்த இந்த செயல் ‘ஹிலாரியஸ்’ ரகமாக அமைந்துவிட்டது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இந்த மனுஷனோட நிதானம் எனக்கு வேணும்” என்றும், “சாம்பியன்ஸ் லீக் மேட்ச்ல இப்படி ஒரு சமையல் கலைஞரா?” என்றும் வேடிக்கையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த ருசிகரமான சம்பவம் போட்டியின் பரபரப்புக்கு மத்தியிலும் பலரைச் சிரிக்க வைத்துள்ளது.
