2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கட்டாயம் வெற்றி பெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அந்த பயணத்தின் போது பேசிய அவர், கொக்கு மீன் பிடிக்க காத்திருப்பது போல 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற காத்திருக்கிறது. இதை எந்த கட்சி எதிர்த்தாலும் அதை உடைத்து எறிந்து பாஜக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.