விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து நான் ஈழ பிரச்சினையில் தலையிட்டு போராடிக் கொண்டிருபவன். அவர் இந்திரா நகர் வீட்டிலே உண்ணாவிரதம் இருந்தபோது…  உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்து,  போர் குரல் கொடுத்த இளைஞர்களில் திருமாவளவன் ஒருவன்.

எங்களை கூப்பிட்டு எங்க முன்னால பேசுறாரு….  இந்த வரலாறு தெரியாத சில்லறைகள் இன்றைக்கு சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றன.  அப்படி ஈழத் தமிழர்களுக்காக எல்லோரும் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்தபோது,  நான்கு நாள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியவன் திருமாவளவன். தமிழ்நாடே பொங்கல் கொண்டாடி கொண்டிருந்தது.

எல்லா தலைவர்களும் பொண்டாட்டி,  பிள்ளைகளோடு பொங்கல் கொண்டாடிட்டு இருந்தாங்க. நம்ம கட்சிக்காரர்களை நான் யாரையும் கேட்கல. நான் மட்டும் போய் உட்கார்றேன். எனக்கு பிரச்சனை கிடையாது.. குடும்பம் அல்ல. எங்க அம்மா மட்டும்தான் இருந்தாங்க.  இருந்து அழுதார்கள். எனக்கு பொண்டாட்டி இல்லை தடுக்கறதுக்கு …  பிள்ளைகள் இல்ல தடுக்கறதுக்கு.. உயிர் போகட்டும்…  திலீபனை போல உண்மையிலேயே உயிரிழக்க நான் தயார், வன்னியரசு தான் அப்போது கூட இருந்தார்.

அவர் கிட்ட மட்டும் நான் இதை சொல்லிட்டு நான் போயிட்டேன்.முன்கூட்டி  சொன்னால் தடுத்துவிடுவார்கள் என யார் கிட்டயும் சொல்லவில்லை. அப்படியெல்லாம் இந்த களத்திலே விடுதலை சிறுத்தைகள் இன்றைக்கும்  ஈழத் தமிழர்களுக்கு நேர்மையாக போராடிக் கொண்டிருக்கின்ற இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சி. ஈழத் தமிழர்கள் நம்மளை ஆதரிக்கிறார்களோ,  இல்லையோ…  அதை பற்றி நமக்கு கவலை இல்லை என தெரிவித்தார்.