நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால், கவலைப்பட வேண்டாம். உடனடியாக உங்கள் பெட்டியில் இருக்கும் டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) சொல்லுங்கள். அவர் ரயில் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிப்பார். இதையடுத்து, அடுத்த பெரிய ரயில் நிலையத்தில் ஒரு மருத்துவர் உங்களுக்காகக் காத்திருப்பார். அவர் வந்து உங்களைப் பரிசோதித்துச் சிகிச்சை அளிப்பார்.
இந்த மருத்துவச் சேவைக்கு நீங்கள் மருத்துவரிடம் ₹100 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும். காய்ச்சல், வயிற்று வலி போன்ற சிறிய பிரச்சனைகளுக்கு, ரயில்வேயின் முதலுதவிப் பெட்டியில் இருந்து இலவசமாக ஒரு டோஸ் மருந்தை TTE உங்களுக்கு வழங்குவார். ஒருவேளை TTE கிடைக்கவில்லை என்றால், நீங்கள் நேரடியாக ரயில்வேயின் உதவி எண் 138-ஐ அழைத்து, மருத்துவ உதவியைக் கோரலாம்.
