ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இந்திய விமானப்படை நிலையத்தில் 2020 முதல் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒப்பந்ததாரர் சுனில் (என்கிற சன்னி) என்பவர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் (உளவுப் பிரிவு அதிகாரி) தொடர்பில் இருந்த சுனில், அந்தப் பெண்ணின் ‘ஹனி டிராப்’ (Honey Trap) வலையில் சிக்கியுள்ளார்.
அந்தப் பெண் கேட்டுக் கொண்டதன் பேரில், விமானப்படை தளத்தின் புகைப்படங்கள், ராணுவ வீரர்களின் நடமாட்டம் மற்றும் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்துர்’ தொடர்பான முக்கிய ரகசியங்களை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பகிர்ந்துள்ளார். சுனிலின் மொபைல் போனை ஆய்வு செய்த போலீசாருக்கு அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI உடன் தொடர்பில் இருந்தது உறுதியானது. தற்போது 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சுனிலிடம், அவர் வேறு என்னென்ன தகவல்களைப் பகிர்ந்துள்ளார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
