ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள போர்கேடா பகுதியில் வீட்டின் சமையலறை மின்விசிறி துவாரத்தின் வழியாக உள்ளே நுழைய முயன்ற திருடன் ஒருவன் பாதி உடல் சிக்கிக் கொண்ட விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சுபாஷ் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த ஜனவரி மூன்றாம் தேதி கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில் நான்காம் தேதி நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார்.
कोटा में चोरी की कोशिश कर रहा युवक एग्जॉस्ट फैन के छेद में फंस गया। मकान मालिक के शोर मचाने पर पुलिस ने आरोपी को गिरफ्तार किया, जो पुलिस स्टिकर लगी कार से आया था#Kota #Rajasthan pic.twitter.com/o3huwNozsg
— NDTV Rajasthan (@NDTV_Rajasthan) January 6, 2026
அப்போது சமையலறைச் சுவரில் உள்ள துவாரத்தில் நபர் ஒருவர் சிக்கித் தவிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த நபரை மீட்டு கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் பவன் என்பதும் அவர் காவல்துறை முத்திரை பதித்த காரில் வந்து திருட்டில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
சிக்கிக் கொண்ட திருடன் உரிமையாளரை மிரட்டிய போதிலும் பொதுமக்கள் விடாமல் பிடித்துக் கொடுத்ததுடன் பெரும் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டதற்காக இறைவனுக்குத் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
