‘கும்பமேளா அழகி’ என்று சமூக வலைதளங்களில் பிரபலமான மோனாலிசாவின் கணவர் ஃபர்மான் கான் மீது மத்தியப் பிரதேச காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 11-ம் தேதி கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் ‘லவ் எனப் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், மோனாலிசா தனது விருப்பப்படியே ஃபர்மானை மணம் முடித்ததாக விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும், இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பழங்குடியினர் ஆணையம் மற்றும் காவல்துறை, திருமணத்தின் போது மோனாலிசாவிற்கு வயது 18 பூர்த்தியாகவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். மகேஷ்வர் அரசு மருத்துவமனையின் பிறப்புப் பதிவேடுகளின்படி, மோனாலிசா டிசம்பர் 30, 2009 அன்று பிறந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருமணத்தின் போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆகியிருப்பது தெரியவந்ததை அடுத்து, ஃபர்மான் கான் மீது போக்சோ சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியைத் திருமணம் செய்த குற்றத்திற்காக தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.