தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சியின் கன்னித் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான இந்த நிகழ்வில், தவெக-வின் முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய், அதனை ஒரு விவசாயிக்கு வழங்கி தனது முதல் அரசியல் அங்கீகாரத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சமூகத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகியோருக்கு அடுத்தடுத்த பிரதிகளை வழங்கி நெகிழ்ச்சியூட்டினார்.

வழக்கமான அரசியல் தலைவர்கள் முக்கிய விஐபிகளுக்கு தேர்தல் அறிக்கையை வழங்கும் நிலையில், “இது மக்களுக்கான அறிக்கை” என்பதைப் பறைசாற்றும் விதமாக எளிய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விஜய் தனது புதிய அரசியல் பயணத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளார்.