2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 16) பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வைத்து முறைப்படி வெளியிட்டார். இந்த நிகழ்வில் எந்த ஒரு அரசியல் விஐபி-யையும் முன்னிலைப்படுத்தாமல், சமூகத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்கும் எளிய மனிதர்களை விஜய் கௌரவித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தேர்தல் அறிக்கை புத்தகத்தின் முதல் பிரதியை ஒரு விவசாயிக்கு வழங்கித் தொடங்கி வைத்த விஜய், அதனைத் தொடர்ந்து ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகியோரிடம் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
“எளிய மக்களுக்கான ஆட்சியைக் கொண்டு வருவதே எங்களின் இலக்கு” என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்ச்சி, தற்போது இணையத்தில் ‘மாஸ்’ ட்ரெண்டிங்கில் உள்ளது.
