2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடிய நிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அவரது காதலி மஹிகா சர்மாவும் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளனர். மைதானத்தில் இந்தியா வெற்றியைத் தழுவிய அந்தத் தருணத்தில், ஹர்திக் பாண்டியாவிற்கு உற்சாகம் அளித்த மஹிகா, வெற்றிக்கு பின் வீரர்களுடன் இணைந்து கொண்டாட்டத்திலும் பங்கேற்றார். “மஹிகா என் வாழ்க்கையில் வந்த பிறகுதான் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது, அடுத்தடுத்து வெற்றிகள் குவிகிறது” என ஹர்திக் பாண்டியா பேட்டியில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Hardik Pandya and Ishan Kishan dancing with their girlfriends after winning the T20 World Cup 2026.!!#hardikpandya #INDvsNZ #IndiaVsNewZealand #T20WorldCup2026final
pic.twitter.com/zqFK5LQY8w— urstruly.1 (@VikashChou70911) March 8, 2026
இருப்பினும், போட்டியின் போது கேமராமேன் அடிக்கடி மஹிகாவைத் திரையில் காட்டியது குறித்து சமூக வலைதளங்களில் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஹர்திக் சிக்ஸர் அடித்தாலும், விக்கெட் எடுத்தாலும் கேமரா அவர் பக்கமே திரும்புவதாக ரசிகர்கள் ஜாலியான கமெண்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர். எது எப்படியோ, சஞ்சு சாம்சன், பும்ரா போன்ற வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா கோப்பையை வென்ற அதே வேளையில், ஹர்திக் – மஹிகா ஜோடியின் இந்த ரொமாண்டிக் தருணங்களும் இந்த உலகக்கோப்பை வெற்றியில் ஒரு மறக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது.
