அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எப்போதுமே தனது அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்குப் பெயர் பெற்றவர். இந்நிலையில், சவூதி அரேபியாவின் சக்திவாய்ந்த பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (MBS) குறித்து அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை இப்போது சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், சவூதி இளவரசர் தன்னை மிகவும் மதிப்பதாகவும், தனக்கு அடிபணிந்து நடப்பதாகவும் குறிப்பிடும் வகையில் “Kissing My A**” என்ற சர்ச்சைக்குரிய வாசகத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
President Trump mocks Saudi Arabia’s Crown Prince Bin Salman: “He didn’t think he would be kissing my ass, he really didn’t and now he has to be nice to me he better be nice to me, he’s gotta be..” pic.twitter.com/44rIkBVK8C
— Yemen in English (@YemenEnglish_ye) March 28, 2026
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இடையிலான ராஜதந்திர உறவில் இது பெரிய விரிசலை ஏற்படுத்துமா என்கிற அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே ஈரான் மற்றும் இஸ்ரேல் போரால் மத்திய கிழக்கு நாடுகள் கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில், ட்ரம்பின் இந்த ‘பகீர்’ பேச்சு எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சவூதி தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப் பதிலும் வராத நிலையில், ட்ரம்பின் ஆதரவாளர்கள் இது வெறும் நகைச்சுவைக்காகப் பேசப்பட்டது என முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
