நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் நீடித்து வருவதால், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், விஜய்யின் உறவினர் பெண்ணான கீர்த்தனா சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், விஜய் தனக்கு மாமா முறை வேண்டும் என்றும், ஆனால் சிறு வயது முதலே அவரை அண்ணன் என்று தான் அழைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், விஜய்யின் தங்கை என்று இணையத்தில் தேடினால் தனது புகைப்படம் தான் வருவதாகவும், ஆனால் தானும் விக்ராந்தும் விஜய்யின் அத்தை பிள்ளைகள் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘வெற்றி’ படத்தின் கதையை எழுதியது தனது தந்தைதான் என்கிற ரகசியத்தையும் அவர் அந்தப் பேட்டியில் பெருமிதத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
