“எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறாரோ, அதுதான் இறுதியான முடிவு!” – தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடனான கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மிகத் தெளிவான மற்றும் ‘மாஸ்’ பதிலை அளித்துள்ளார். தவெக-வுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தை அப்படியே வழிமொழிந்த அண்ணாமலை, கூட்டணி விவகாரத்தில் இனி குழப்பங்களுக்கு இடமே இல்லை என முழங்கியுள்ளார்.
”அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்; அவரது வார்த்தையே எங்களின் இறுதி முடிவு” என அண்ணாமலை கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தரப்பில் இருந்து கூட்டணி குறித்து எந்த சமிக்ஞையும் வராத நிலையில், அண்ணாமலையின் இந்த ‘பவர்ஃபுல்’ ஸ்டேட்மெண்ட், மற்ற கட்சிகளுக்கு ஒரு அதிரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
