தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் களம் யாரும் எதிர்பார்க்காத பெரும் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஆளும் திமுக கூட்டணி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் (TVK): 106 இடங்கள் (முன்னிலை) அதிமுக கூட்டணி: 75 இடங்கள் திமுக கூட்டணி: 51 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு, இனிப்புகள் உள்ளிட்ட கொண்டாட்டப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், தேர்தல் முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் மற்றும் பொருட்கள் அவசர அவசரமாக அகற்றப்பட்டு வேனில் ஏற்றிச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தொண்டர் ஒருவர் கூறுகையில், இந்த ஏற்பாடுகள் நேற்று இரவு நடந்த ஒரு நிகழ்விற்காகச் செய்யப்பட்டவை. அதற்கும் தேர்தல் முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்போதுதான் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியுள்ளது எனத் தெரிவித்தார். இருப்பினும், தவெக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று ‘மேஜிக்’ நம்பரை நோக்கி நகர்வது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் யோசிக்க வைத்துள்ளது.