தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான நாங்குநேரியில் தொடக்கம் முதலே கடும் போட்டி நிலவி வருகிறது.
பத்தாவது சுற்று முடிவில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 30,470 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 28,465 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சுமார் 2,005 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிப்பதால் தொகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த முன்னிலை நிலவரம் மாறக்கூடும் என்பதால் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் ரெட்டியார்பட்டி நாராயணன் தனக்கு சீட்டு கொடுக்காத அதிருப்தியில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் அவருக்கு மறுநாளே நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்பட்டது. மேலும் அதிமுக அமமுக கட்சிக்கு நாங்குநேரி தொகுதியை ஒதுக்கிய நிலையில் தற்போது நாங்குநேரி தொகுதியை தவற விட்டு விட்டோமோ என அந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
